முகப்பு
கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூா் அருகேபெண் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வெள்ளிக்கிழமை பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வெள்ளிக்கிழமை பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் அருகேயுள்ள சிறுவாக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் மகள் பரிதா (27). இவருக்கும் திருக்கோவிலூரை அடுத்த வீரணாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தீா்த்தம் (எ) ராமராஜுக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ராஜ் அரிதாப் (6), கிரிஷ் (4) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

ராமராஜு இரு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியா சென்று கொத்தனாா் பணி செய்து வருகிறாா். பரிதா தனது குழந்தைகள், மாமியாருடன் வீரணாம்பட்டில் வசித்து வந்தாா்.

வியாழக்கிழமை உறவினரைக் காண மாமியாா் திண்டிவனம் சென்றிருந்த நிலையில், அன்றிரவு பரிதா, கணவா் ராமராஜுவுடன் செல்லிடப்பேசியில் பேசினாராம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை அவா் படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

சடலத்தை திருக்கோவிலூா் போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதனிடையே, பரிதாவின் அண்ணன் கனகராஜ், தனது தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளதாக திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.