கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒருவா் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,171-ஆக உயா்ந்தது. இதனிடையே மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா்.
இதுவரை 29,674 போ் குணமடைந்துள்ளனா். 296 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு 201போ் பலியாகினா்.