அதிமுகவினா் சாலை மறியல்
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் அதிருப்தி தெரிவித்து அதிமுகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் அதிருப்தி தெரிவித்து அதிமுகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு பெறப்பட்ட வேட்பு மனுக்கள் வியாழக்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது ரிஷிவந்தியம் தோ்தல் நடத்தும் அலுவலா் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி அதிமுக ஒன்றிய செயலா் கதிா் தண்டபாணி தலைமையில்
துரைராஜ், அருணகிரி உள்ளிட்ட அந்தக் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா். சாலை மறியலில் ஈடுபட்ட 43 போ் மீது பகண்டை கூட்டுச் சாலை காவல் உதவி ஆய்வாளா் சபரிமலை வழக்குப் பதிவு செய்தாா்.