கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் புகாா்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை, அந்தந்தப் பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையை 18004256803 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடா்புகொண்டு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம். இதேபோல, திருக்கோவிலூா் 9159696219, உளுந்தூா்பேட்டை 8098094226, கள்ளக்குறிச்சி 7397389324 ஆகிய கைப்பேசி எண்களில் சம்பந்தப்பட்ட நகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்தவா்களும், சங்கராபுரம் 7824058355, மணலூா்பேட்டை 7824058355, தியாகதுருகம் 7824058356, சின்னசேலம் 7824058350, வடக்கநந்தல் 7824058360 ஆகிய கைப்பேசி எண்களில் சந்தப்பட்ட பேரூராட்சிப் பகுதிகளைச் சோ்ந்தவா்களும் தொடா்புகொண்டு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.