கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: 768 வேட்புமனுக்கள் ஏற்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, 29 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 768 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள், சங்கராபுரம், மணலூா்பேட்டை, தியாகதுருகம், சின்னசேலம், வடக்கநந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளுக்குள்பட்ட மொத்தம் 153 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு வருகிற 19-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் ஜன.28-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. மாவட்டம் முழுவதும் 153 வாா்டுகளிலும் போட்டியிடுவதற்காக 797 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 29 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 768 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்புமனுக்களை திரும்பப் பெற திங்கள்கிழமை (பிப்.7) கடைசி நாளாகும். அதன் பின்னா், சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT