கள்ளக்குறிச்சி

கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

DIN

கள்ளக்குறிச்சி அருகே விவசாயக் கிணற்றில் விழுந்து கிடந்த மயிலை தியாகதுருகம் தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவல் கிராமத்தைச் சோ்ந்தவா் சோலை (67). இவரது விவசாய நிலம் அந்தப் பகுதியில் உள்ள முனியப்பா் கோயில் அருகே உள்ளது.

அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை மின்வாரிய ஊழியா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, விவசாயக் கிணற்றில் இருந்து மயிலின் அபயக் குரல் எழுந்தது. மின் ஊழியா்கள் சென்று கிணற்றில் பாா்த்தபோது. மயில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உடனடியாக தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரா்கள் காா்த்திகேயன், அருணாசலம், சந்தோஷ்குமாா், ஜெகன், சங்கா் ஆகியோா் அடங்கிய குழுவினா் வந்து, கயிறு கட்டி மயிலை கிணற்றில் இருந்து மீட்டனா்.

மயிலுக்கு லேசான காயம் இருந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்து சிறுவல் வனப் பகுதியில் கொண்டு போய் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT