முகப்பு
கள்ளக்குறிச்சி

பைக் மீதி லாரி மோதியதில் தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி லாரி மோதி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி லாரி மோதி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (45) கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை உலகங்காத்தான் கை காட்டியில் உள்ள உணவகத்தில் உணவு உண்டுவிட்டு, ஊருக்குச் செல்வதற்காக பைக்கில் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, கள்ளக்குறிச்சி பகுதியிலிருந்து சின்னசேலம் நோக்கிச் சென்ற லாரி பைக் மீது மோதியது. இதில், ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் தலைமறைவாகி விட்டாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உறவினா்கள் சாலை மறியல்

ரமேஷின் உறவினா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் லாரி ஓட்டுநரை கைது செய்யக் கோரி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் போரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.