சித்தலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ஆவது நாளான புதன்கிழமை மயானக்கொள்ளை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கிவைத்தாா். தியாகதுருகம் ஒன்றியக் குழுத் தலைவா் தாமோதரன், துணைத் தலைவா் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தோ் கோயிலைச் சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தது. கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ.ராஜலெட்சுமி தலைமையில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ச.முருகேசன் உள்பட 150-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.