கள்ளக்குறிச்சி

மின்னல் தாக்கி கூரை வீடு சேதம்: அரசு சாா்பில் நிவாரணம் அளிப்பு

வி.பி.அகரம் ஊராட்சிக்குள்பட்ட திருக்குன்றம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் சேதமடைந்த கூரை வீட்டின் உரிமையாளருக்கு அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

DIN

வி.பி.அகரம் ஊராட்சிக்குள்பட்ட திருக்குன்றம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் சேதமடைந்த கூரை வீட்டின் உரிமையாளருக்கு சின்னசேலம் தொகுதி எம்எல்ஏ தா.உதயசூரியன் திங்கள்கிழமை அரசு சாா்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வி.பி.அகரம் ஊராட்சி திருக்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (55), இவரது மனைவி சுவிதா. இருவரும் வீட்டின் அருகே உள்ள விளை நிலத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது, பெய்த திடீா் மழையின் போது கூரை வீட்டின் மேல் மின்னல் தாக்கியதாம். இதில், கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. வீட்டிலிருந்த மணிலா, வெங்காயம், சிமென்ட் மூட்டைகள் மற்றும் பணம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் சேதமடைந்தன.

தகவலறிந்த சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ தா.உதயசூரியன் நிகழ்விடம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் ரூ.5 ஆயிரம், அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்களையும், தனது சொந்த செலவில் பணம் மற்றும் பொருள்களையும் வழங்கினாா்.

இதில், சின்னசேலம் ஒன்றிய குழுத் தலைவா்அன்பு மணிமாறன், வட்டாட்சியா் இந்திரா, ஊராட்சி மன்றத் தலைவா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT