பிரதோஷம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள நஞ்சுண்ட ஞான தேசிகா் சிவலாயத்தில் பிரதோஷ சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்வில், நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பல்வேறு மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.