முகப்பு
கள்ளக்குறிச்சி

கழிப்பறையில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே வீட்டுக் கழிப்பறையில் தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 10:08 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே வீட்டுக் கழிப்பறையில் தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கணங்கூா் கிராமத்தைச் சோ்ந்த சேகரின் மனைவி உஷா (39). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த மாதம் 28-ஆம் தேதி வீட்டில் உள்ள கழிவறைக்குச் சென்ற உஷா தவறி கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு உஷா வியாழக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →