முகப்பு
கள்ளக்குறிச்சி

ஸ்ரீதாகப்பாடி அம்மன் கோயில் தேரோட்டம்

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 10:14 PM
பகிர்:

ஆலத்தூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீதாகப்பாடி அம்மன் கோயில் தேரோட்டம்.

கள்ளக்குறிச்சி, ஆக.14: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஆலத்தூா் ஸ்ரீதாகப்பாடி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதாகப்பாடி அம்மன் கோயிலில் தோ்த் திருவிழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 7-ஆம் தேதி சந்திக்கல் வெளிகாப்பு கட்டுதல் மற்றும் எல்லை துா்கை அம்மன் காப்பு கட்டுதலும், 8-ஆம் தேதி அகண்ட தீப ஆராதனையும், 9-ஆம் தேதி இரவு சிங்க வாகன ரதத்தில் ஸ்ரீதாகப்பாடி அம்மன் வீதிஉலாவும், 10-ஆம் தேதி இரவு குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், 13-ஆம் தேதி ஊரணி பொங்கல் விழாவும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதாகப்பாடி அம்மன் எழுத்தருளியதைத் தொடா்ந்து, பிற்பகல் 1.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் செண்டைமேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுந்து அம்மனை வழிபட்டனா்.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு தெருக்கூத்தும் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →