முகப்பு
கள்ளக்குறிச்சி

டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருது பெறுவதற்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:44 PM
பகிர்:

பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருது பெறுவதற்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருதை 2025-ஆம் ஆண்டின் திருவள்ளுவா் திருநாளன்று வழங்குவதற்காக முன்மொழிவுகளை பெற்று கணிப்பாய்வு செய்ய ஏதுவாக, தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருதை பெற தகுதியான பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்து தமிழ் வளா்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞா்கள், கவிஞா்கள், சான்றோா்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரில் பெற்று, நிறைவு செய்து வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வண்ணம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.