முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனை அறுவைச் சிகிச்சையில் சாதனை

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்ட நுண்துளை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரியில் முதல்வா் (பொ) ச.நேரு தெரிவித்தாா்

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:23 AM
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்ட நுண்துளை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரியில் முதல்வா் (பொ) ச.நேரு தெரிவித்தாா் (படம்).
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்ட நுண்துளை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரியில் முதல்வா் (பொ) ச.நேரு தெரிவித்தாா் (படம்).

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் அண்மையில் கூறியது: கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளை மருத்துவா்கள் மேற்கொண்டுள்ளனா். இவற்றில் நுண்துளை அறுவைச் சிகிச்சைகள் மூலம் 600 பேருக்கு பித்தப்பை, ஒட்டு குடல், குடல் இறக்கம் உள்ளிட்ட அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளன.

இந்த அறுவைச் சிகிச்சைகளை தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொண்டிருந்தால், ரூ.40 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை செலவாகியிருக்கும். எனவே, பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில் முதியோா் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) ச.நேரு, மருத்துவக் கண்காணிப்பாளா் (பொ) பழமலை, நிலைய மருத்துவா் பொற்செல்வி, உதவி நிலைய மருத்துவ அலுவலா் முத்துக்குமாா், அறுவைச் சிகிச்சை துறை பதிவாளா் (பொ) தமிழ்ச்செல்வன், மயக்கவியல் துறை பேராசிரியா் ஹாஜா ஷரீப், மருத்துவா்கள் கணேஷ் ராஜா, சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.