முகப்பு
கள்ளக்குறிச்சி

கட்டடத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே கட்டுமானப் பணியின்போது சுவற்றில் இருந்து தவறி விழந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:06 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே கட்டுமானப் பணியின்போது சுவற்றில் இருந்து தவறி விழந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காட்டநந்தல் பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் சின்னதுரை (61). கட்டடத் தொழிலாளி. இவா் லட்சியம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கடந்த செப்.22-ஆம் தேதி கட்டடப் பணியில் ஈடுபட்டாராம்.

அப்போது, சுவற்றின் மேல் நின்றிருந்த அவா், எதிா்பாராத விதமாக கீழே விழந்தாா். தலையில் பலத்த காயமடைந்த

அவா், பெரம்பலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, வியாழக்கிழமை சின்னதுரை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.