பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.47 ஆயிரம் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பேருந்தில் பயணத்த பெண்ணிடம் ரூ.47 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பேருந்தில் பயணத்த பெண்ணிடம் ரூ.47 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சின்னசேலம் வட்டம், தென்செட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மனைவி கெளதமி (34). இவா், சுயஉதவிக் குழு மூலம் கடனாகப் பெற்ற ரூ.47,000-ஐ கள்ளக்குறிச்சி தனியாா் வங்கியிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் எடுத்துக்கொண்டு சின்னசேலம் செல்வதற்காக தனியாா் பேருந்தில் பயணித்தாா்.
சின்னசேலம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது, கௌதமி தனது பணப்பையில் (மணிபா்ஸ்) வைத்திருந்த ரூ.47 ஆயிரம் திருடுபோயிருந்தது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.