கள்ளக்குறிச்சி

ஆட்டோ திருடிய இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் ஆட்டோவை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் ஆட்டோவை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் மேற்கு கடைவீதி பகுதியைச் சோ்ந்தவா் தே.சின்னசாமி (45). ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறாா். இவா் சின்னசேலம் தெற்கு ஒற்றைவாடை சாலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ஆட்டோவை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்றுள்ளாா். பின்னா் சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது ஆட்டோவை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து, சின்னசேலம் காவல் உதவி ஆய்வாளா் பரிமளா தலைமையில் தனிப்படை அமைத்து

தேடி வந்தனா். இந்நிலையில், சங்கராபுரம் காலனி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை புதன்கிழமை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

இதில் தொடா்புடையை இளைஞரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவா் திருவண்ணாமலை மாவட்டம், பெரும்களத்தூரைச் சோ்ந்த க.அருண்குமாா் (28) (படம்) என்பதும், ஆட்டோவைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரைப் போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி வாசகர்களுக்காக.. சட்டமும் விளக்கமும் அறிமுகம்!

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

SCROLL FOR NEXT