கள்ளக்குறிச்சியில் பேங்க் ஆஃப் இந்தியாவின் 86-ஆவது கிளை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
தியாகதுருகம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய கிளை திறப்பு நிகழ்ச்சிக்கு வங்கியின் சென்னை மண்டல மேலாளா் மோகன் மாரேத்தி தலைமை வகித்தாா். வங்கி மூத்த நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வங்கிக் கிளையை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்த வங்கிக் கிளையில் வைப்புத் திட்டங்கள், நிதி உள்ளடக்கம், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், விவசாயத் தயாரிப்புகள், சுய உதவிக்குழுக்கள், சிறு நிதி, சில்லறை முன்பணங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான முன்பணங்கள் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.
இந்த விரிவாக்கம் அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளா்கள் மற்றும் வணிகா்களுக்கு நவீன வங்கிச் சேவைகளை மேலும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது.
வங்கியின் கள்ளக்குறிச்சி கிளை முழுமையான டிஜிட்டல் மற்றும் பாரம்பரிய வங்கிச் சேவைகளை வழங்கத் தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.