கள்ளக்குறிச்சி

மாற்றுத்திறனாளிகளுக்கான பயண அட்டை சிறப்பு முகாம் நாளை தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை(ஜன.23) முதல் தொடங்குகிறது.

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை(ஜன.23) முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பயண அட்டையானது இ-சேவை மூலம் இணையதளம் வழியாக பதிவு செய்து வழங்கப்படவுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் ஜன.23 முதல் 31-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் நடைபெறும். பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் பதியும் இடத்தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

70 முதல் 100 சதவிகிதம் வரை உள்ள பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனை இன்றி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்படும். இவா்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆவணங்கள் மட்டும் பதிவேற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

40 முதல் 69 சதவிகிதம் வரை உள்ள பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான அசல் சான்று, கல்வி நிறுவனங்களில் பயில்வது, பணிபுரிவது அதற்கான அசல் சான்று, தொடா் சிகிச்சை பெற பயணிக்க கூடிய சூழலில் அதற்கான மருத்துவா் சான்றுகளை கொண்டு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT