திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றனவா என அமைச்சர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மானிய மீதான கோரிக்கையின் போது அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் பேசியதாவது:
ஒருங்கிணைந்த சட்டப்பேரவை, தலைமை செயலகத்தை இதே இடத்தில் கட்ட வேண்டும். சட்டப்பேரவை பணியாற்றும் பல்நோக்கு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்க வேண்டும். பேரவையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கண்காணிப்புக் கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்படும் வணிகர்களை பாதுகாக்க அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
போலீஸார் வாகனத் தணிக்கையில் நிறுத்தாமல் செல்லும் வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடிப்பதில்லை.
இவ்வாறு செல்பவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
காவல் துறையை நவீன படுத்த வேண்டும். சட்டப்பேரவை நடைபெறும்போது அனைத்து துறை இயக்குநர்களும் இங்கேயே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகழேந்தி என்ற தீயணைப்பு வீரர் காரைக்காலில் கடலில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை மீட்கும்போது உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.