புதுச்சேரி

பள்ளியில் பிரவேச உற்சவ் நிகழ்ச்சி

தினமணி

கோடை விடுமுறை முடிந்த நிலையில், புதுவை வடுவக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் பிரவேச உற்சவ் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
 பள்ளித் துணை ஆய்வாளர் எம்.ஜி.ராபர்ட் கென்னடி தலைமை வகித்தார். பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலிலிருந்து பெற்றோர்கள் பள்ளிக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், இனிப்புகள் போன்றவற்றை தட்டுகளில் வைத்து சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.
 பள்ளி வாயிலில் குழந்தைகளுக்கு சந்தனம், குங்குமமிட்டு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
 புதுமனை புகுவிழா போன்று பெரிய பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
 பெற்றோர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. ஆசிரியை மஞ்சுளா வரவேற்றார். தலைமையாசிரியை சாந்தகுமாரி சிறப்புரையாற்றினார்.
 ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சந்தோஷ்குமார், பிரியா, வனிதா, பணியாளர்கள் இளஞ்செழியன், சரசுவதி ஆகியோர் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT