புதுச்சேரி

மரம் சரிந்து விழுந்ததில் சாலையில் சென்றவர் சாவு

புதுச்சேரியில் சாலையோரம் இருந்த மரம் திடீரென சரிந்து அந்த வழியாகச் சென்றவர் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

தினமணி

புதுச்சேரியில் சாலையோரம் இருந்த மரம் திடீரென சரிந்து அந்த வழியாகச் சென்றவர் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
 நெல்லித்தோப்பு - புவன்கரே சாலையில் சுமார் 50 ஆண்டுகள் பழைமையான பெரிய மரம் இருந்தது. இந்த நிலையில், அந்த மரம் திடீரென புதன்கிழமை சரிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக நடந்து சென்ற காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகன் (50) மீது மரத்தின் கிளைகள் விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 மரம் விழுந்ததன் காரணமாக புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி நீதிமன்றம் அமைந்துள்ள வழியாகப் போக்குவரத்து திரும்பிவிடப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள், வனத்துறை ஊழியர்கள், போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்துக்குப் பிறகு மரம் அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது.
 இதனிடையே மரம் முறிந்து விழுந்ததில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முருகன் இறந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT