முகப்பு
புதுச்சேரி

சந்திரசேகரனை ஆணையர் பதவியில் தொடர கிரண் பேடி அறிவுறுத்தல்

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நகராட்சி ஆணையர் சந்திரசேகரனை அதே பதவியில் தொடருமாறு ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:11 PM
பகிர்:

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நகராட்சி ஆணையர் சந்திரசேகரனை அதே பதவியில் தொடருமாறு ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.
 புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் அளித்த உரிமை மீறல் புகார் தொடர்பாக பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அளித்த உத்தரவால், நகராட்சி ஆணையர் சந்திரசேகர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் கணேசனுக்கு அந்தப் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது.
 இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் மனோஜ் பரிதா பிறப்பித்தார். இந்த உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தில்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் உத்தரவை ரத்து செய்துள்ளார்.
 இதற்கிடையே, புதுச்சேரி திரும்பிய கிரண் பேடி, ஞாயிற்றுக்கிழமை காலை சைக்கிள் மூலம் நகரப் பகுதியின் தூய்மையை பார்வையிட்டார். பின்னர் கடற்கரை சாலை வந்த அவர், அங்கு இருந்த காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஆணையர் சந்திரசேகரனை அழைத்து தனியாக 10 நிமிடங்கள் பேசினார்.
 அப்போது அவர், திங்கள்கிழமை முதல் நகராட்சி ஆணையராக பணியைத் தொடருங்கள். புதுச்சேரியின் கதாநாயகன் நீங்கள் எனக் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் கிரண்பேடி கூறுகையில்: மக்களுக்கு பணிபுரிவதற்காக தான் அதிகாரிகள் உள்ளனர். இதில் சந்திரசேகரன் மக்களுக்காக 10 மாதங்களாக கடுமையாக மக்களுக்கு உழைக்கிறார். அவரை பாதுகாப்பது எனது கடமை எனத் தெரிவித்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.