கல்லூரிக்கு ஐசிடி அகாதெமி விருது
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரிக்கு தமிழ்நாடு ஐசிடி அகாதெமியின் சிறந்த
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரிக்கு தமிழ்நாடு ஐசிடி அகாதெமியின் சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருது 2018 கிடைத்துள்ளது.
தமிழ்நாடு, புதுவையைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகள் இந்த உயரிய விருது பெற விண்ணப்பித்திருந்தன. தமிழ்நாடு ஐசிடி அகாதெமியுடனான பன்முகக் கூட்டுச் செயல்பாடுகளின் சிறந்த ஒருங்கிணைப்பின் அளவுகோல்களின் அடிப்படையில் ஐசிடி அகாதெமியின் தலைமை நிர்வாக அதிகாரி சிவகுமார், மணக்குள விநாயகர் கல்லூரி நிர்வாகிகளிடம் இந்த விருதை வழங்கினார்.
கல்லூரித் தலைவர் - நிர்வாக இயக்குநர் தனசேகரன், கல்லூரி முதல்வர் மலர்க்கண் ஆகியோருடன் இணைந்து வேலைவாய்ப்பு அதிகாரி ஜெயகுமார் விருதைப் பெற்றுக் கொண்டார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஐசிடி பிரிட்ஜ்-18 மாநாட்டில், ஐசிடி அகாதெமியின் துணைத் தலைவர் அன்புத்தம்பி, ஒருங்கிணைப்பாளர் அழகிரி, சிடிஎஸ், ஆரக்கிள், ஐபிஎம், என்விடியோ, ஆட்டோ டெஸ்க், ஹோஹோ உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.