முகப்பு
புதுச்சேரி

பள்ளியில் இயற்கை வேளாண் பயிற்சி

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
 இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக அமலோற்பவம் பள்ளியின் தொடக்கப்பள்ளியில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்களுக்கு பயிர் தெரிவு, மண்பரிசோதனை, மண்வளம், பயிர்பாதுகாப்பு, களை மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இயற்கை வேளாண்மைக்காக தாவரக் கழிவுகள், காய்கறிக் கழிவுகளை பயன்படுத்துதல், விலங்குகளின் கழிவுகளில் இருந்து வேளாண் உரங்கள் தயாரிப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் பள்ளியின் 5, 6-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →