முகப்பு
புதுச்சேரி

புதுவையில் 30 தொகுதிகளுக்கான பாஜக பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், புதுவை மாநிலத்தில் 30 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:26 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், புதுவை மாநிலத்தில் 30 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
 பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உத்தரவின் பேரில், தேசிய இணைப் பொதுச் செயலர் சந்தோஷ் ஒப்புதலுடன் தேர்தல் பொறுப்பாளர்களை மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் அறிவித்துள்ளார்.
 அதன்படி, காரைக்கால் மாவட்ட பொறுப்பாளராக மாநில பொதுச் செயலாளர் தங்க.விக்ரமன், வில்லியனூர் மாவட்ட பொறுப்பாளராக மற்றொரு மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், புதுச்சேரி நகர மாவட்ட பொறுப்பாளராக மாநிலப் பொருளாளர் கே.ஜி.சங்கர், உழவர்கரை மாவட்ட பொறுப்பாளராக எஸ்.செல்வகணபதி, ஆரியாங்குப்பம் மாவட்ட பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் ஆர்.செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 30 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் பெயர், தொகுதி (அடைப்புக் குறிக்குள்) விவரம்:
 சிவகுமார் (மண்ணாடிப்பட்டு), தெய்வசிகாமணி (திருபுவனை), சரவணக்குமார் (ஊசுடு), சோழராஜன் (மங்கலம்), ஜி. ரஞ்சித்குமார் (வில்லியனூர்), முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி (உழவர்கரை), எம். சுந்தரமூர்த்தி (கதிர்காமம்), என். நாகராஜ் (இந்திரா நகர்), விஸ்வமோகன் (தட்டாஞ்சாவடி), தட்சிணாமுர்த்தி (காமராஜர் நகர்), புகழேந்தி (லாஸ்பேட்டை), சாய் ஜே.சரவணக்குமார் (காலாபேட்டை), ஆனந்தன் (முத்தியால்பேட்டை), ஆறுமுகம் (ராஜ்பவன்), வடிவேல் (உப்பளம்), கண்ணன் (உருளையான்பேட்டை), ரத்தினவேல் (நெல்லித்தோப்பு), உமாபதி (முதலியார்பேட்டை), விஜயலட்சுமி (அரியாங்குப்பம்), வி.முருகன் (மணவெளி), மெüலிதேவன் (ஏம்பலம்), கோபி (எ) சிவராஜ் (நெட்டப்பாக்கம்), என்.புகழேந்தி (பாகூர்), சகுந்தலா (நெடுங்காடு), எம். அருள்முருகன் (திருநள்ளார்), ஏ. சிதிராயீல்வம் (காரைக்கால் (வடக்கு), துரை.சேனாதிபதி (காரைக்கால் தெற்கு), எஸ். இளங்கோவன் (நிரவி), துரை. கணேசன் (மாஹே), எம்.மகேஷ் (ஏனாம்).
 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பொறுப்பாளர்களை தேசியத் தலைவர் அமித் ஷா சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை தமிழக, புதுவை பொறுப்பாளர்கள் மாநாடு கிழக்கு கடற்கரை சாலை கோல்டன் பீச்சில் நடைபெறுகிறது.
 அதில், புதுவை சார்பில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.