முகப்பு
புதுச்சேரி

பாண்டெக்ஸ் ஊழியர்கள் நூதன போராட்டம்

ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு பாண்ட்டெக்ஸ் ஊழியர்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு பாண்ட்டெக்ஸ் ஊழியர்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பாண்டெக்ஸ் சாயப் பிரிவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 17 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்கக் கோரி அவர்கள் பலகட்ட போராட்டங்களில ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஏஐடியுசி பாண்டெக்ஸ் சாயப் பிரிவில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை தட்டாஞ்சாவடி பாண்டெக்ஸ் அலுவலகம் அருகே வயிற்றில் ஈரத்துணி அணிந்து போராட்டம் நடத்தினர் (படம்.
போராட்டத்துக்கு, பாண்டெக்ஸ் கூட்டுறவு பிரிவு சங்கத் தலைவர் முருகன், செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் குட்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலச் செயலாளர் சேதுசெல்வம், கைத்தறிச் சங்கத் தலைவர் செல்வராசு, பாசிக் ஊழியர்கள் 
சங்கச் செயலாளர் முத்துராமன் உள்பட பலர் கலந்துகொண்டு 
ஊதியம் வழங்கக் கோரி கோஷம் எழுப்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →