முகப்பு
புதுச்சேரி

விசைப்படகு உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அறிவிக்கப்பட்ட நிவாரண உதவியை வழங்கக் கோரி, புதுவை விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 15 மே, 2018 at 4:38 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

அறிவிக்கப்பட்ட நிவாரண உதவியை வழங்கக் கோரி, புதுவை விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை விசைப்படகு உரிமையாளர்கள் முகத்துவாரம் தூர்வாரப்படாததால் மாநில அரசு அறிவித்த நிவாரணத் தொகையான ரூ. 75 ஆயிரத்தை நிபந்தனையின்றி வழங்க வேண்டும்; தினமும் வழங்கப்படும் மானிய டீசலை 300 லிட்டராக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைப்படகு உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மீன் வள நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் மீன்வளத் துறை இயக்குநரிடம் மனு அளிக்க வந்த போது அலுவலகத்தில் ஊழியர்களும், இயக்குநரும் பணிக்கு வராமல் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டதால் மீன் வளத் துறை அலுவலகம் தங்களுக்கு வேண்டாம் எனக் கூறி, விசைப்படகு உரிமையாளர்கள் டீசல் மானிய உரிமை புத்தகத்தின் நகலை மீன்வள துறை வளாகத்தின் முன் போட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.