புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவரின் மடிக் கணினி திருட்டு

DIN


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவரின் மடிக் கணினி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஒடிசாவைச் சேர்ந்தவர் சந்தீப் குமார் (41). ஜிப்மரில் எலும்பு மருத்துவராகப் பணியாற்றி வரும் இவர், ஜிப்மர் வளாகத்திலேயே தங்கி உள்ளார். இந்த நிலையில், கடந்த நவ. 3-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி, ஒடிஸாவுக்குச் சென்றார்.
அங்கு இருந்தபோது, அவரது செல்லிடப்பேசிக்கு ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க முயற்சிப்பதாக குறுந்தகவல் வந்ததாம்.
இதையடுத்து, ஏ.டி.எம். அட்டை திருடப்பட்டிருப்பதை உணர்ந்த அவர், வங்கியைத் தொடர்பு கொண்டு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தடை செய்யுமாறு கூறினாராம்.
இந்த நிலையில், சனிக்கிழமை பணிக்குத் திரும்பிய போது, அவரது அறை உடைக்கப்பட்டு, அங்கிருந்த மடிக் கணினி, ஏ.டி.எம். அட்டைகள் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT