முகப்பு
புதுச்சேரி

வீட்டின் மீது மின்னல் பாய்ந்து பொருள்கள் சேதம்

புதுச்சேரியில் மழையின் போது மின்னல் பாய்ந்ததில் வீட்டில் உள்ள மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

Updated On : 22 அக்டோபர், 2018 at 10:02 AM
பகிர்:

புதுச்சேரியில் மழையின் போது மின்னல் பாய்ந்ததில் வீட்டில் உள்ள மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை மழை பெய்து கொண்டிருந்தபோது சாரம் கெங்கையம்மன் கோயில் வீதியில் உள்ள செளந்தர் வீட்டில் மீது மின்னல் பாய்ந்தது. 
இதன் காரணமாக மின்சார வயர்களில் கூடுதல் மின் அழுத்தம் ஏற்பட்டு, வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து எரிந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்த செளந்தர் உள்ளிட்ட குடும்பத்தார் 4 பேரும் உடனடியாக வெளியேறி தப்பினர்.
தவகலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் ஏற்பட்ட தீயைப் போராடி அணைத்தனர். இதனால், அடுத்தடுத்த வீடுகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.