புதுச்சேரி

கடைகள், நிறுவனங்களை ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய தொழிலாளர் துறை வலியுறுத்தல்

DIN


கடைகள், நிறுவனங்களை ஒரு மாதத்துக்குள் தொழிலாளர் துறையில் பதிவு செய்ய வேண்டும் என புதுவை தொழிலாளர் துறை வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
புதுச்சேரியில் இயங்கும் கடைகள், அலுவலகங்கள், பண்டக அறைகள், கிடங்குகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், எரிவாயு உருளைகள், வாகன எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மருந்து நிலையங்கள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், வர்த்தக சபை, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசுச்சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள், மன்றங்கள், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள், எஸ்டிடி பூத்கள், தொலைதொடர்பு சேவை மையங்கள், விவசாய பண்ணைகள், தாவர நாற்றங்கால் நிலையங்கள், கோழி பண்ணைகள், மீன்-இறால் பொரிப்பகங்கள், தொண்டு நிலையங்கள் (அ) சங்கங்கள் பதிவு சட்டம் 1860 கீழ், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், இறைச்சிக் கூடங்கள், பாதுகாப்பு முகமைகள், தனியார் விரைவு அஞ்சல் பணி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களையும், புதுச்சேரி கடைகள், நிறுவனங்கள் சட்டம் 1964-இன் கீழ், பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே, இதுவரை பதிவு செய்யாதவர்கள் தொழிலாளர் அதிகாரி (அமலாக்கம்) அலுவலகத்தில் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
மேலும், தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்குவதை பணியமர்த்துபவர்கள் உறுதி செய்ய வேண்டும். 
தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர், ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT