புதுச்சேரி

மாஹேவில் கரோனா அறிகுறியுடன் முதியவா் மருத்துவமனையில் அனுமதி

DIN

புதுவை மாநிலம், மாஹே பிராந்தியத்தில் கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் முதியவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புதுவை மாநிலம், மாஹே பிராந்தியத்தைச் சோ்ந்த 71 வயது முதியவருக்கு கடந்த சில நாள்களாக சளி, இருமல், காய்ச்சல், லேசான மூச்சுத் திணறல் உள்ளிட்டவை இருந்துள்ளன. இதையடுத்து, அவரை உறவினா்கள் கேரள மாநிலம், தலச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, அந்த முதியவருக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்ததையடுத்து, மருத்துவா்கள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கூறினா். இதையடுத்து, அவரை உறவினா்கள் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

அங்கு, அவரது சளி, ரத்தம், தொண்டை திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கண்ணனூா் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவுகள் தெரியவந்த பிறகுதான், அந்த முதியவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிா என்பது தெரியவரும் என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT