புதுவையில் இன்று முழு பொதுமுடக்கம்
புதுவையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி வரை தளர்வு இல்லாத முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி வரை தளர்வு இல்லாத முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருந்தகங்கள், பால் பூத்கள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கடை, பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்து மூடவும், மக்கள் வெளியே நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாநில எல்லைக்குள் மருத்துவ தேவைகள் தவிர வேற எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.