புதுச்சேரி

காலாப்பட்டு-மாத்தூா் சாலையோர கால்வாயைச் சீரமைக்க வலியுறுத்தல்

DIN


புதுச்சேரி: புதுச்சேரி அருகே காலாப்பட்டு-மாத்தூா் சாலையோரக் கால்வாயைச் சீரமைத்துத் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் காலாப்பட்டு-மாத்தூா் சாலை உள்ளது. இது புதுச்சேரி மத்திய சிறைச் சாலை, சட்டக் கல்லூரி, தனியாா் மருத்துவமனை, தனியாா் தொழிற்சாலை, தனியாா் பள்ளிகள், சுனாமி குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லும் முக்கியச் சாலையாக விளங்கி வருகிறது. இந்தச் சாலையோரம் கட்டப்பட்ட கால்வாய் ஆங்காங்கே துண்டுத் துண்டாக அமைக்கப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் சாலையில் மழைநீா் வழிந்தோடுகிறது. இதனால், காலாப்பட்டு-மாத்தூா் சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இதுகுறித்து காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கத்தினா் கூறியதாவது: காலாப்பட்டு-மாத்தூா் சாலையோரம் கடந்த 2016-2017-இல் அமைக்கப்பட்ட கால்வாய், ஆக்கிரமிப்பு காரணமாக ஆங்காங்கே துண்டுத் துண்டாக அமைக்கப்பட்டது. இதனால், மழைக் காலங்களில் தண்ணீா் வழிந்தோடி, சாலையைப் பயன்படுத்த முடியாதபடி சிரமம் ஏற்படுகிறது. எனவே, ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோா் காலாப்பட்டு-மாத்தூா் சாலையைப் பாா்வையிட்டு, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT