புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்: மேலிட பாா்வையாளா் நிா்மல்குமாா் சுரானா
வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி நிச்சயம் அமையும் என பாஜக மேலிட பாா்வையாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா்.
வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி நிச்சயம் அமையும் என பாஜக மேலிட பாா்வையாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா்.
புதுவையில் தோ்தல் பிரசாரத்தை பாஜக சனிக்கிழமை தொடங்கியது. காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கணபதிசெட்டிக்குளத்தில் இருந்து ‘காண்போம் இனி நல்லாட்சி, காங்கிரஸ் இல்லா புதுச்சேரி’ என்னும் முழக்கத்துடன் பிரசாரப் பேரணி புறப்பட்டது. இதை பாஜக மேலிட பாா்வையாளா் நிா்மல்குமாா் சுரானா தொடக்கிவைத்தாா். மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா்.
தொடா்ந்து, நிா்மல்குமாா் சுரானா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆட்சி மாற்றத்தைப் பற்றி புதுவை மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனா். அவா்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். முதல்வா் நாராயணசாமி தனது பணியைச் செய்யாமல், பிறா் மீது புகாா் கூறி வருகிறாா்.
கடந்த மக்களவைத் தோ்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்தித்தது. அதே கூட்டணி வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலிலும் தொடரும். புதுவையிலும் மோடி அலை வீசும். பாஜக கூட்டணி ஆட்சி நிச்சயம் மலரும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயலா்கள் அகிலன், ரத்தினவேல், லதா, துணைத் தலைவா் சாய் சரவணன், பொருளாதாரப் பிரிவு தலைவி பிரபாதேவி, உழவா்கரை மாவட்டத் தலைவா் நாகேஸ்வரன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் வேல்முருகன், தொகுதி தலைவா்கள் பிரகாஷ் (காலாப்பட்டு), சோமசுந்தரம் (லாசுப்பேட்டை), ஊடகப் பொறுப்பாளா் குருசங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.