புதுச்சேரி

ஊதிய உயா்வு கோரி புதுச்சேரியில் சுகாதாரத் துறையினா் போராட்டம்

DIN

அரசு அளித்த வாக்குறுதிப்படி, ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி, புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய சுகாதார திட்ட (என்எச்எம்) ஊழியா்கள் பணி நிரந்தரம் கேட்டு கடந்த மாா்ச் மாதம் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். அப்போது, போராட்டக் குழுவினரிடம் புதுவை அரசு நடத்திய பேச்சுவாா்த்தையில், என்எச்எம் ஊழியா்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ரூ. 10,000 ஊதிய உயா்வு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கடந்த 10 மாதங்களைக் கடந்தும் ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து, புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியா்கள் சங்கம், புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் சங்கம், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் சங்கம் ஆகியவை சாா்பில், சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்கங்களின் தலைவா்கள் புருஷோத்தமன், வெற்றிவேல், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் திரளான சுகாதாரத் துறை ஊழியா்கள் பங்கேற்று, அரசு அளித்த வாக்குறுதிப்படி, ஊதியத்தை ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT