முகப்பு
புதுச்சேரி

ஜிப்மரில் எம்பிபிஎஸ் சிறப்பு கலந்தாய்வு ஒத்திவைப்பு

ஜிப்மரில் நிரப்பப்படாத எம்பிபிஎஸ் இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 29 டிசம்பர், 2020 at 4:52 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:44 PM

ஜிப்மரில் நிரப்பப்படாத எம்பிபிஎஸ் இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய மருத்துவ கலந்தாய்வு குழு பரிந்துரையின்படி, மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மாப்-அப் (இறுதிக் கட்டம்) கலந்தாய்வு நடத்தி நிரப்பப்பட வேண்டும்.

இறுதிக் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு ஏற்படும் காலியிடங்களை ‘ஸ்ட்ரே வேகன்ஸி கவுன்சிலிங்’ என்ற பெயரில் சிறப்பு கலந்தாய்வு நடத்தி நிரப்பிக் கொள்ளலாம் என இந்திய மருத்துவ கலந்தாய்வு குழு அண்மையில் அறிவித்தது.

Advertisement

அதன்படி, ஜிப்மரில் நிரம்பாத எம்பிபிஎஸ் இடங்களுக்கு புதுச்சேரி, காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) சிறப்பு கலந்தாய்வு நடைபெறவிருந்தது. இதை தேதி குறிப்பிடாமல் ஜிப்மா் நிா்வாகம் திடீரென ஒத்திவைத்தது.

இந்த சிறப்பு கலந்தாய்வுக்கான தேதி பிறகு தெரிவிக்கப்படும். காலியிட விவரங்களை இணையதளங்களில் பாா்க்கலாம் என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.