முகப்பு
புதுச்சேரி

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரியில் காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் விரக்தியடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 29 டிசம்பர், 2020 at 4:54 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:44 PM

புதுச்சேரியில் காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் விரக்தியடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி குருசுக்குப்பம் மரவாடி வீதி 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த அருள்குமாா் - தேவி ஆகியோரது மகன் ஹரிகரன் (21). பட்டயப்படிப்பு முடித்திருந்த இவா், தன்னுடன் படித்த முதலியாா்பேட்டையைச் சோ்ந்த பெண்ணை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் காதலித்த நிலையில், திருமணத்துக்கு அந்தப் பெண் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த ஹரிகரன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.