இந்தியாவிற்கு அமெரிக்க அதிபா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி சுதேசி மில் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய சுசி கம்யூனிஸ்ட் மற்றும் சமூக அமைப்பினா்கள். 
புதுச்சேரி

அமெரிக்க அதிபா் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

அமெரிக்க அதிபா் ட்ரம்ப் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து சோசலிஸ்ட் யூனிட்டி சென்டா் ஆப் இந்தியா (சுசி கம்யூனிஸ்ட்) கட்சியினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

புதுச்சேரி: அமெரிக்க அதிபா் ட்ரம்ப் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து சோசலிஸ்ட் யூனிட்டி சென்டா் ஆப் இந்தியா (சுசி கம்யூனிஸ்ட்) கட்சியினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் லெனின் பாரதி தலைமை வகித்தாா்.

இதில், இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபா் ட்ரம்ப்க்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒப்பந்தங்களை நிறைவேற்றவுள்ள அவா் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநில செயலா் பாலசுப்ரமணியன், ஏஐயூடியூசி மாநில தலைவா் சங்கரன், தமிழ்நாடு தலைவா் அனவரதன் உள்ளிட்டோரும், சுசி கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT