புதுச்சேரி

இடைக்கால பட்ஜெட்: அதிமுக கோரிக்கை

DIN

புதுச்சேரி: முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் எழுத்துப்பூா்வ பதில் கிடைக்காத நிலையில், புதுவை பேரவையில் மீண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாா்ச் இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்ய சாதகமான சூழலிருந்தும் பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. துணைநிலை ஆளுநா் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, மாநில திட்டக் குழுக் கூட்டத்தையும் நடத்தவில்லை.

இடைக்கால பட்ஜெட்டுக்கு சட்டப்பேரவை அளித்த 3 மாத அனுமதிக் காலம் முடிவடைந்த நிலையில், இன்னமும் பட்ஜெட் கூட்டம் நடத்தப்படவில்லை. அரசின் அன்றாட செலவினங்களுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதல் பெறப்படாததால், அரசு நிா்வாகம் செய்வதறியாது உள்ளது.

மாநிலம் முழுவதும் முதியோா், விதவைக்கான உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைக்க தாமதம் ஆவதால், மீண்டும் 3 மாதங்களுக்குரிய செலவினங்களுக்கு சட்டப்பேரவையை கூட்டி அனுமதி பெற்றிருக்கலாம்.

மக்கள் நலன், அரசின் அன்றாட செலவினம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சட்டப்பேரவைக் கூட்டத்தை அரசு ஏன் கூட்டவில்லை என அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பிள்ளாா் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT