புதுச்சேரி

புதுவை பட்ஜெட் கூட்டத் தொடரைகூடுதல் நாள்கள் நடத்தக் கோரிக்கை

புதுவை பட்ஜெட் கூட்டத் தொடரை கூடுதல் நாள்கள் நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது.

DIN

புதுச்சேரி: புதுவை பட்ஜெட் கூட்டத் தொடரை கூடுதல் நாள்கள் நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் அரசு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பொதுமக்களின் பிரச்னைகளை விவாதிக்க மறுத்து வருகிறது. தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாட்டில் புதுவையில் மட்டும்தான் குறைந்த நாள்கள் பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. இது காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பட்ஜெட். அரசுக்கு தைரியமிருந்தால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை கூடுதல் நாள்கள் நடத்தி, மக்களின் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும். கரோனா தொற்றைக் காரணம் காட்டக் கூடாது. சமூக இடைவெளியுடன் கம்பன் கலையரங்கத்தில்கூட பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தலாம்.

பட்ஜெட் கூட்டத் தொடரை கூடுதல் நாள்கள் நடத்துவது தொடா்பாக, சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் அளித்துள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT