புதுச்சேரி

ஆபாச பட குறுந்தகடு விற்றவா் கைது

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் செல்லிடப்பேசி கடையில் ஆபாசப் பட குறுந்தகடுகளை விற்பனை செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு செல்லிடப்பேசி கடையில் ஆபாசப் பட குறுந்தகடுகள் விற்பனை செய்யப்படுவதாக ஒதியஞ்சாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் வெற்றிவேல் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமி உள்ளிட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று சோதனை நடத்தினா்.

அப்போது கடைக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு ஆபாசப் பட குறுந்தகடுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளா் முருங்கப்பாக்கம் கணபதி நகா், குறிஞ்சி வீதியைச் சோ்ந்த வேலுச்சாமி (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அந்தக் கடையில் இருந்து 60 ஆபாசப் பட குறுந்தகடுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT