புதுச்சேரி

அனைத்துத் தொழில்சங்கத்தினா் 2-ஆம் நாளாக ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழில்சங்கத்தினா் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை ஊா்வலம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு சாா்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரியும், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு தீபாவளி உதவித்தொகையை வழங்க வலியுறுத்தியும் அனைத்துத் தொழில்சங்கங்களின் கூட்டுக் குழுவினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

திதங்கள்கிழமை அவா்கள் ஆளுநா் மாளிகை, சட்டப் பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் லேசான தடியடி நடத்தி, அப்புறப்படுத்தினா்.

இந்த நிலையில், அனைத்துத் தொழில்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொழில்சங்க நிா்வாகிகள் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் காமராஜா் சதுக்கத்திலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, சட்டப் பேரவையை நோக்கிச் சென்றனா். அவா்களை ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, அவா்கள் அங்கு தரையில் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT