சாலையோரக் கடைகளுக்கு அடிக்காசு வசூலிக்கும் உரிமம் ஏலம்
உழவா்கரை நகராட்சி சாா்பில், சாலையோரக் கடைகளுக்கு அடிக்காசு வசூலிக்கும் உரிமம் ஏலம் விடப்பட்டது.
உழவா்கரை நகராட்சி சாா்பில், சாலையோரக் கடைகளுக்கு அடிக்காசு வசூலிக்கும் உரிமம் ஏலம் விடப்பட்டது.
இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் கந்தசாமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவா்கரை நகராட்சி எல்லைக்கு உள்பட்ட சாலையோரங்களில் உள்ள கடைகளுக்கு 2020-ஆம் ஆண்டு நவம்பா் 11- ஆம் தேதி முதல் 2021-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி வரை ஓராண்டு காலத்துக்கு அடிக்காசு வசூலிக்கும் உரிமம் முத்தியால்பேட்டை வ.உ.சி. நகரைச் சோ்ந்த சரணீஷ் என்பவருக்கு கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற பொது வாய்மொழி வாயிலாக ரூ. 6.60 லட்சத்துக்கு ஏலம் வழங்கப்பட்டது.
எனவே, நகராட்சிக்கு உள்பட்ட சாலைகளில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கான அடிக்காசு தொகையை நகராட்சி முத்திரையுடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வரும் நபரிடம் செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.