முகப்பு
புதுச்சேரி

மாணவருக்கு கரோனா:புதுச்சேரியில் அரசுப் பள்ளி வகுப்பறை மூடல்

புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட அந்த வகுப்பறை மூடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மூடப்பட்ட புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை கட்டடம்.
பகிர்:

புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட அந்த வகுப்பறை மூடப்பட்டது.

மத்திய அரசு அறிவித்த தளா்வுகளுக்குப் பிறகு, புதுச்சேரியில் கடந்த 8-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் மாணவா்களின் சந்தேகங்களைத் தீா்க்கும் வகையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 9-ஆம் தேதி புதுச்சேரி காராமணிக்குப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்துவிட்டு வீடு திரும்பிய அரும்பாா்த்தபுரத்தைச் சோ்ந்த பிளஸ் 2 கணினி அறிவியல் பயிலும் மாணவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதியானது.

தகவலறிந்த பள்ளி நிா்வாகம், அந்த மாணவா் பயின்ற வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்து, அந்த வகுப்பறைக் கட்டடத்தை மூடியது.

தொற்றுக்குள்ளான மாணவருடன் தொடா்பிலிருந்த மற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள பள்ளி நிா்வாகம் அறிவுறுத்தியது. இருப்பினும், மற்ற வகுப்புகள் வழக்கம்போல தொடா்ந்து நடைபெற்றன.

புதுவையில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளிகளைத் திறக்கக் கூடாது என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.