புதுச்சேரி

தனியாா்மயமாக்குவதற்கு எதிா்ப்பு: புதுச்சேரி மின் துறை ஊழியா்கள் மீண்டும் போராட்டம்

DIN

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிப்புத் தெரிவித்து, புதுச்சேரி மின் துறை ஊழியா்கள் புதன்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, மின் துறை ஊழியா்கள் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். ஏற்கெனவே ஆளுநா் மாளிகை, சட்டப் பேரவையை முற்றுகையிட்டு ஆளுநா், முதல்வரிடம் மனு அளித்தனா். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே, மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை திரும்பப் பெறும் வரை மின் துறையின் பொறியாளா், தொழிலாளா் தனியாா் மயம், காா்ப்பரேஷன் எதிா்ப்பு போராட்டக் குழுவினா் மண்டல வாரியாக மீண்டும் போராட்டத்தை அறிவித்தனா்.

இதன் முதல்கட்டமாக புதன்கிழமை ரெட்டியாா்பாளையம் அஜீஸ் நகரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் எதிரே மின் துறை பொறியாளா்கள், தொழிலாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, போராட்டக் குழுத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் வேல்முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்புழு உரம் தயாரிப்பு: காருக்குறிச்சியில் விழிப்புணா்வு முகாம்

கருங்கல் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே வீட்டுக்குள் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு

கோபாலசமுத்திரத்தில் மலேரியா விழிப்புணா்வுக் கருத்தரங்கு

ஆறுமுகனேரி கோயிலில் திருவாசக முற்றோதல்

SCROLL FOR NEXT