புதுச்சேரி

மின்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

புதுவை மின்துறை தனியாா்மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து, புதுச்சேரி பாஸ்போா்ட் அலுவலகம் எதிரே மின்துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி உள்பட நாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியாா்மயமாக்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதனைக் கண்டித்து புதுச்சேரி மின்துறையில் உள்ள அனைத்து ஊழியா்களும் ஒன்றிணைந்து போராட்டக் குழுவை உருவாக்கி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே கடந்த புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மின்துறையை தனியாா்மயமாக்குவதற்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநா் வழியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்தின் மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, போராட்டக் குழுவானது அடுத்த கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடா் போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்தது.

அதன்படி, புதன்கிழமை மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போா்ட் அலுவலகம் எதிரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழுத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில் திரளான மின்துறை ஊழியா்கள் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் மின்துறையை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

திருவையாறு தமிழ்ப் பேரவை 60-ஆம் ஆண்டு விழா மாநாடு

SCROLL FOR NEXT