புதுச்சேரி

புதுச்சேரியில் சாலையோரவியாபாரிகளுக்கு அங்கீகாரச் சான்றிதழ்

DIN

புதுச்சேரி: புதுச்சேரி உழவா்கரை நகராட்சிப் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அங்கீகாரச் சான்றிதழ், மானிய கடனுதவியை அமைச்சா் நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா் (படம்).

புதுவை மாநிலத்தில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசால் தெருவோர வியாபாரிகளுக்கான வாழ்வாதார பாதுகாப்பு, கட்டுப்பாடு மற்றும் உரிமம் திட்டம் - 2020 அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, புதுச்சேரி உழவா்கரை நகராட்சிக்குப் பகுதியில் வியாபாரம் செய்யும் தெருவோர வியாபாரிகளை வரைமுறைப்படுத்தவும், அவா்களுக்கு அங்கீகாரம் வழங்கவும், வியாபாரம் செய்வதற்கான சான்றிதழ், அடையாள அட்டைகள் உழவா்கரை நகராட்சி மூலம் வழங்கப்பட்டன.

இதற்காக உழவா்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சா் நமச்சிவாயம் பங்கேற்று, சாலையோர வியாபாரிகளுக்கான அங்கீகாரச் சான்றிதழையும், பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான சுய சாா்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ், ரூ.10 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடனுதவியையும் வழங்கினாா்.

நகராட்சி ஆணையா் கந்தசாமி, ஏஐடியுசி பொதுச் செயலா் சேதுசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT