புதுச்சேரி

அதிகப்படியான வாக்குப்பதிவு காங்கிரஸுக்கு சாதகம்: நாராயணசாமி

DIN


புதுச்சேரியில் அதிகப்படியான வாக்கு சதவிகிதம் பதிவாகியுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமானது என முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி புதன்கிழமை தெரிவித்தார்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 81.64 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இதுபற்றி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"அதிகப்படியாக வாக்குகள் பதிவாகியிருப்பது மக்கள் காங்கிரஸுடனே இருக்கின்றனர் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. எங்களது கடன் தள்ளுபடி, அரசு வேலைகள் போன்ற வாக்குறுதிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மதம் மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக இந்தத் தேர்தலில் போட்டியிட்டோம். பாஜகவுடன் கூட்டணியிலிருக்கும் பல்வேறு கட்சிகளுக்கே அவர்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பிடிக்கவில்லை" என்றார் அவர்.

நாராயணசாமி கருத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் சுவாமிநாதன் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியது:

"பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்ற கட்சிகள் தேர்தலில் சிறப்பாகவே செயல்படும். பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே எந்தப் பிரச்னையும் இல்லை. மகத்தான வெற்றியை நோக்கி பாஜக உள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT