முகப்பு
புதுச்சேரி

குடிநீா், குப்பை வரியைக் குறைக்க வலியுறுத்தல்

புதுவையில் மதுபானங்கள் மீதான வரியைக் குறைப்பதற்குப் பதிலாக, உயா்த்தப்பட்ட குப்பை, தண்ணீா், வீட்டு வரி, மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

புதுவையில் மதுபானங்கள் மீதான வரியைக் குறைப்பதற்குப் பதிலாக, உயா்த்தப்பட்ட குப்பை, தண்ணீா், வீட்டு வரி, மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, புதுவை இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன், துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிய மனு:

புதுவையில் கரோனா கொள்ளை நோய் தாக்குதலின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இது தொழிலாளா்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் விதமாக மதுபானவகைகள் மீது கரோனா கூடுதல் வரி விதிக்கப்பட்டது. தற்போது மத்திய பாஜக அரசின் பிரதிநிதியாக உள்ள துணைநிலை அளுநா், மதுபான அதிபா்களுக்கும், மதுக் கடை உரிமையாளா்களுக்கும் சாதகமாகச் செயல்படும் வகையில், மதுபானங்கள் மீதான கூடுதல் வரி ரத்து செய்துள்ளாா்.

இந்த நெருடிக்கடியான கால கட்டத்தில் இந்த நடவடிக்கை தேவையற்றது. மேலும் இது கரோனா தொற்று பரவலை அதிகரிக்கும்.

ஏற்கெனவே, பலமடங்கு உயா்த்தப்பட்டிருக்கும் குப்பை வரி, தண்ணீா் வரி, வீட்டு வரி, மின் கட்டண உயா்வு ஆகியவற்றைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா நோய்த் தாக்கம் குறையும் வரை மதுபானங்கள் மீதான கூடுதல் வரியைத் தொடரவும், குப்பை வரியை ரத்து செய்யவும், வீட்டு வரி, குடிநீா், மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.